முகப்பு
இந்தியா

சபரிமலை: ஸ்பாட் புக்கிங் அமல்படுத்த யுடிஎஃப் வலியுறுத்தல்!

ஸ்பாட் புக்கிங் முறையை அமல்படுத்த காங்கிரஸ் தலையிலான யுடிஎஃப் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 12:20 PM
- Center-Center-Kochi
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் ஸ்பாட் புக்கிங் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலையிலான யுடிஎஃப் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை, தமிழ் மாத பூஜைகள், படிபூஜை ஆகியவை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாதத்திற்கு 5 நாள்களும், விஷேச நேரங்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகிறது.

சீசன் நேரங்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ஸ்பாட் புக்கிங் முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் கூட்டம் காரணமாக புக்கிங் செய்ய ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க கேரள அரசும், தேவசம் போர்டும் முடிவு செய்தது.

Advertisement

இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வதை அனுமதிக்க வேண்டும். கணினி அறிவு இல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்த பலர் சபரிமலைக்கு வருகை தருகின்றனர்.

41 நாள் விரதம் முடித்துவிட்டு புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்குக் கோயிலில் பிரார்த்தனை செய்ய வாய்ப்பு மறுக்கப்படுவதோடு மாநிலத்தில் கடுமையான பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.

சீசன் காலத்தில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்ய அனுமதிப்பது குறித்து அரசு அவசரமாகப் பரிசீலிக்க வேண்டும், நாளொன்றுக்கு 80 ஆயிரம் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேரவையில் வி.டி. சதீசன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.