மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டம் ANI
இந்தியா

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கோரி மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி...

DIN

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதினை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

இவரது மறைவை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ரத்தன் டாடாவுக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50 கோடி வசூலைக் கடந்த ஹிருதயபூர்வம்!

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

கேரளத்து இளவரசி... சம்யுக்தா மேனன்!

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

SCROLL FOR NEXT