இந்தியா

தில்லியில் ரூ.2,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் -ஒரே வாரத்தில் 2-ஆவது முறை

Din

தேசியத் தலைநகா் தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

200 கிலோ எடையுள்ள இந்தப் போதைப் பொருள், மேற்கு தில்லியின் ரமேஷ் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, தெற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி ரூ.5,620 கோடி மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். தற்போது மீண்டும் அதிக அளவில் போதைப் பொருள் சிக்கியுள்ளது.

ரூ.5,620 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஏழாவது நபரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT