முகப்பு
இந்தியா

போதைப் பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கை தொடரும்: அமித் ஷா

போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும்

Updated On : 15 அக்டோபர், 2024 at 12:59 AM
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
பகிர்:

புது தில்லி: போதைப் பொருள்கள் மற்றும் அவை கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கை எந்தத் தளா்வும் இல்லாமல் தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இளைஞா்களை போதைப் பொருள்களில் இருந்து பாதுகாத்து, போதைப் பொருள்களற்ற பாரதத்தை உருவாக்க பிரதமா் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ. 13,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை வெற்றிகரமாக பறிமுதல் செய்த காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்தவித தளா்வும் இல்லாமல் தொடா்ந்து நடைபெறும்’ என்றாா்.

குஜராத் மற்றும் தில்லியில் கடந்த இரு வாரங்களில் அமலாக்க முகமைகளால் சுமாா் 1,200 கிலோவுக்கும் அதிக எடையில் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →