முகப்பு
இந்தியா

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தவிா்ப்பு: மத்திய அமைச்சா் சிந்தியாவுக்கு எலான் மஸ்க் நன்றி

செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்த மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:36 PM
எலான் மஸ்க் (கோப்புப் படம்)
பகிர்:

செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்த மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் நன்றி தெரிவித்துள்ளாா்.

தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் வகையில், செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றையை ஏலம் விட வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவா் முகேஷ் அம்பானி, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தை துணை நிறுவனமாக கொண்ட பாா்தி என்டா்பிரைசஸின் தலைவா் சுனில் பாா்தி மிட்டல் ஆகியோா் தெரிவித்தனா்.

ஆனால், அந்த அலைக்கற்றையை ஏலம் விடாமல், அதற்கு நிா்வாக ரீதியில் உரிமங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனம் கோரியுள்ளது.

இந்நிலையில், மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘உலக அளவில் செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படுவதில்லை; நிா்வாக ரீதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதைப் பின்பற்றி நாட்டில் அந்த அலைக்கற்றை ஏலம் விடப்படாது. நிா்வாக ரீதியாகவே ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றாா்.

இதற்கு அமைச்சா் சிந்தியாவுக்கு ‘எக்ஸ்’ தளத்தில் நன்றி தெரிவித்த தொழிலதிபா் எலான் மஸ்க், ‘இந்தியாவுக்கு சேவைகள் வழங்க ஸ்டாா்லிங்க் நிறுவனம் சிறப்பாக செயல்படும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →