சி.வி. ஆனந்த் போஸ் கோப்புப் படம்
இந்தியா

அடிப்படை கடமைகளைச் செய்யத் தவறியது மமதா அரசு: சி.வி. ஆனந்த் போஸ்

மாநிலத்திற்குத் தேவையான அடிப்படை கடமைகளை மமதா அரசு செய்யத் தவறியதாக ஆளுநர் குற்றச்சாட்டு.

DIN

மாநிலத்திற்குத் தேவையான அடிப்படை கடமைகளை மமதா பானர்ஜி தலைமையிலான அரசு செய்யத் தவறியதாக ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் இன்று (அக். 16) குற்றம் சாட்டினார்.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் காவல் துறை அதிகாரி மற்றும் மூத்த மருத்துவர்கள் சுட்டிக்காட்டப்படுவது, மாநிலத்தின் நிறுவனமயமாக்கப்பட்ட குற்றங்களையே காட்டுகிறது என விமர்சித்தார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சி.வி. ஆனந்த் போஸ், மக்களைக் காக்க வேண்டிதும், அவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதும் மாநில அரசின் கடமை. குறிப்பாக முதல்வர் மமதா பானர்ஜியின் கடமை. ஆனால், இங்கு மாநில அரசு அடிப்படை கடமைகளைச் செய்யத் தவறியுள்ளது. இதற்கு பொறுப்பேற்பது யார்? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தலையிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலத்தில் நிலவும் விவகாரங்களில் ஆளுநர் மாளிகை தலையிட்டு அதனை நிறுத்த முடியாது. ஏனெனில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் மாளிகை செயல்படுகிறது என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மற்றொரு காவல் துறை அதிகாரி தற்கொலை

பத்திரிகையாளர் சந்திப்பில் டீசல் படக்குழுவினர் - புகைப்படங்கள்

உ.பி.யில் கடந்த 8 ஆண்டுகளில் 15,000 என்கவுன்ட்டர்கள்! 256 குற்றவாளிகள் பலி!

ஏடிஎம் காா்டு மூலம் நூதன மோசடி: இருவா் கைது

புல்லுவன் பாட்டு... கேரள அரசின் விருதுவென்ற ரிமா கல்லிங்கல் படம்!

SCROLL FOR NEXT