முகப்பு
இந்தியா

அக்.20ல் வாரணாசி செல்கிறார் பிரதமர்: பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல்!

ரூ.1,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:34 PM
பிரதமர் மோடி
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் அக்டோபர் 20ல் ரூ.1300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

வாரணாசியில் இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பாஜகவின் காசி மண்டலத் தலைவர் திலீப் படேல் கூறுகையில், அட்டவணையின்படி பிரதமர் மோடி அக்.20 பிற்பகல் 12.30 மணியளவில் பாபத்பூர் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து ரிங் சாலையில் உள்ள சங்கர நேத்ராலயாவுக்குச் சென்று மருத்துவமனையைத் திறந்துவைக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள வசதியை ஆய்வு செய்த பின்னர் உரை நிகழ்த்துகிறார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, சிக்ரவில் உள்ள சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்திறகு சாலை மார்க்கமாகச் செல்லும் பிரதமர் அங்கு விளையாட்டு வாளகத்தையும் திறந்து வைக்கிறார்.

பாபத்பூர் விமான நிலைய முனையம் மற்றும் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான மற்ற விமான நிலையம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.

வாராணாசியில் ஏடிஎஸ் மற்றும் எஸ்பிஜி அதிகாரிகள் உள்பட 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்திக் கண்காணிப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.