பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவான், பசந்த்பூர், பாட்னா மருத்துவமனைகளில் மொத்தம் 79 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் சிவான் மாவட்டத்தில் மட்டும் உயிரிழப்பு 28 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
மற்றொரு சம்பவத்தில், சரண் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 33 ஆக அதிகரித்துள்ளது.
காவல்துறை இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
பிகாரில் முழுமையாக மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.