கோப்புப் படம் 
இந்தியா

விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

சைக்கிளில் வந்தவர் மீது மோதமலிருக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

DIN

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் வெள்ளிக்கிழமை (அக். 18) மாலை 6.30 மணியளவில் மிதிவண்டியில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் எதிரே வந்த பேருந்து, மங்கனி ராம் மீது மோதுவதுபோல் வந்துள்ளது.

ஆனால், விபத்தை தடுக்கும்விதமாக பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை திருப்ப முயன்றதில் அருகிலிருந்த வடிகாலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மங்கனி ராம், பேருந்தில் பயணித்த இருவர் என 3 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், பேருந்தில் சிக்கியிருந்த 51 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT