இந்தியா

போதைப்பொருள் வைத்திருந்த கேரள நடிகை கைது!

நடிகைக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் குறித்தும் விசாரணை

DIN

கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த நடிகை ஷம்நாத் (34) போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடிகையின் வீட்டில் வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், தடை செய்யப்பட்ட மருந்துகளை நடிகை வைத்திருப்பது தெரிய வந்தது. அவர் அதனைப் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் குறித்தும் மேற்பட்ட விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

SCROLL FOR NEXT