மகாராஷ்டிரத்தில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினா் நக்ஸல்கள் இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மும்பை: மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினா் நக்ஸல்கள் இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:
நக்ஸல்கள் நடமாட்டம் அதிகமுள்ள சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாவட்ட காவல்துறையின் சி60 கமாண்டோ குழுவினா் 22 போ் மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையின் குழுவினா் இணைந்து வனப்பகுதியின் இருவேறு இடங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.
பதுங்கியிருந்த நக்ஸல்கள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் 5 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.
மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள நிலையில், கிழக்கு மகாராஷ்டிர வனப்பகுதியில் நக்ஸல்கள் குழு ஒன்றுகூடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனா். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.