வயநாட்டில் ராகுல், பிரியங்கா பேரணி. PTI
இந்தியா

வயநாட்டில் ராகுல், பிரியங்கா பேரணி!

வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்வது பற்றி...

DIN

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியாக செல்கிறார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், பிரியங்கா காந்தியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பேரணியாகச் சென்று இன்னும் சற்றுநேரத்தில் பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாரும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா்.

ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT