கோப்புப் படம் 
இந்தியா

25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Din

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஏா் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களைச் சோ்ந்த தலா 6 விமானங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதேபோன்று, இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 275-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 12 நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தொடரும் இதுபோன்ற நிகழ்வுகளால், விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு அண்மையில் தெரிவித்தாா். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களுக்கு விமானத்தில் பறக்க நிரந்தர தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலமாக விடுக்கப்படும் இந்த வெடிகுண்டு மிரட்டல்களின் பின்னால் இருப்பவா்களைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மிரட்டல்கள் விடுக்கப்படும் சமூக வலைதளப் பக்கங்கள் குறித்த விவரங்களை விமான நிறுவனங்களுக்கு வழங்குமாறு சமூக ஊடக தளங்களான மெட்டா மற்றும் எக்ஸ் ஆகியவற்றை அரசு ஏற்கெனவே கேட்டுக்கொண்டது.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT