முகப்பு
இந்தியா

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை: தகவல்கள்

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் ஒருங்கிணைந்த பங்கரவாத தொழிற்சாலை இயங்கி வருகிறது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 10:21 AM
பயங்கரவாதிகள்
பகிர்:

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டுப் பயிற்சி ஆலை இயங்கி வரும் இடமானது, பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்துக்குச் சொந்தமான வளாகம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முகாம்கள் குறித்து தகவல்கள் கூறுவது என்னவென்றால், பயங்கரவாத கூட்டுப் பயிற்சி முகாம் இயங்கி வருவது மிகவும் பாதுகாப்பான இடம். அதற்கு அருகிலேயே பாகிஸ்தான் ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தினரைத் தாண்டித்தான் பயங்கரவாத முகாமுக்குள் யாரும் நுழைய முடியும் என்கிறது அந்த தகவல்.

பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐயின் உயர் அதிகாரி, இளம் பெண்கள் மற்றும் ஏராளமான இளைஞர்களுக்கு ஆயுதங்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் அந்த முகாமை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அப்போதாபாத் என்பது, அல்கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் மிகவும் பாதுகாப்பாக ஒரு வீட்டில் தங்கியிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறப்பு ரணுவப் படை, அதிரடி தாக்குதல் நடத்தி ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்ற இடம்தான். ஒசாமா பின் லேடன் தங்கியிருந்த இடம் பிறகு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த இடத்தில் இருந்த கட்டடங்களுக்குள் தற்போதைய புதிய முகாம் செயல்படுகிறதா என்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் மூன்று பயங்கரவாத அமைப்புகளுக்கும் இங்கு ஆள்சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.