முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 30 குரங்கு சடலங்கள் கண்டெடுப்பு

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 26 அக்டோபர், 2024 at 11:21 AM
இறந்த குரங்குகள்.
பகிர்:

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வெமுலவாடா காவல் எல்லைக்குட்பட்ட நம்பள்ளி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை இறந்த நிலையில் 30 குரங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உடனே தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் இறந்துகிடந்த குரங்குகளின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

உடற்கூராய்வு அறிக்கைக்கு பிறகே குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.