மேற்கு வங்கத்தில் டானா புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது.
கடந்த அக்.21ல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.23ல் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "டானா" எனப் பெயரிடப்பட்டது. டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. இதனால் ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இவ்விரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
டானா புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மின் கம்பியை தொட்டத்தில் சந்தன்தாஸ்(31) என்ற குடிமை தன்னார்வலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் போலீஸார் குழுவுடன் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஹவுரா முனிசிபல கார்ப்பரேஷனின் ஊழியர் ஒருவர் தண்டிப்பாராவில் தண்ணீர் தேங்கிய சாலையில் இறந்துகிடந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக வெள்ளியன்று இருவர் உயிரிழந்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமாவில் ஒருவரும், மற்றொருவர் தெற்கு கொல்கத்தாவில் மற்றொருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.