படம் | முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக வலைதளப் பதிவு
இந்தியா

பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் கோபாலன் நம்பியார் காலமானார்! பிரதமர் இரங்கல்

பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் டி. பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை (அக். 31) காலமானார்.

DIN

மின்னணு துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் பிபிஎல் குழுமத்தின் நிறுவனர் டி. பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை (அக். 31) காலமானார். அவருக்கு வயது 94.

கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நம்பியார், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “டிபிஜி நம்பியார் அவர்கள் தொழில் துறையிலும் புதுமை கண்டுபிடிப்புகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

இந்தியாவை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்துவதில் கடினமாகப் பங்காற்றியவர். அவரது மறைவு செய்தி கேட்டு வேதனையுற்றேன். அவரது குடும்பத்திற்கும் அவரை பின்தொடர்பவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக” பதிவிட்டுள்ளார்.

மறைந்த டி. பி. கோபாலன் நம்பியார், பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT