ராகுல் கார்கேவுடன் ஹேமந்த் சோரன் 
இந்தியா

ராகுல், கார்கேவுடன் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பிடிஐ

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தார்.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாயி சோரன் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியிலிருந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த சில நாள்களுக்குப் பிறகு, கட்சியின் தற்போதைய செயல்பாடு, அதிருப்தியைத் தொடர்ந்த இந்த சந்திப்பு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் கார்கே, ராகுல் காந்தியைச் சோரன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என சோரன் கோரியிருந்தாலும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து சம்பாயி சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, ஜூலை 4ல் ஹேமந்த் சோரன் மீண்டும் முயல்வாகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT