படம் | பிடிஐ
இந்தியா

பிரதமர் மோடி புரூனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம்!

பிரதமர் மோடி சிங்கப்பூர், புரூனே நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.

DIN

பிரதமர் மோடி இன்று(செப். 3) காலை புரூனே நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். புதுதில்லியிலிருந்து புரூனே தலைநகர் பந்தார் செரி பேகவானுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் மோடி.

புரூனே தருஸ்ஸலாம் நாட்டுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் அரசுமுறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஒருநாள் பயணமாக புரூனே செல்லும் மோடி, அங்கு மன்னர் சுல்தான் ஹாஜி ஹஸானால் போல்கியாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, இந்தியா - புரூனே இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - புரூனே இடையே விண்வெளித் துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

புரூனேயிலிருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை(செப். 4) செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் தர்மான் சண்முகரத்னம் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

SCROLL FOR NEXT