முகப்பு
இந்தியா

ஹரியாணா பேரவைத் தோ்தல்: 67 பாஜக வேட்பாளா்களின் முதல் பட்டியல் வெளியீடு

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 67 பாஜக வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாநில முதல்வா் நாயப் சிங் சைனி லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 9:49 PM
BJP
பகிர்:

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 67 பாஜக வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாநில முதல்வா் நாயப் சிங் சைனி லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறாா்.

மாற்று கட்சிகளில் இருந்து அண்மையில் சோ்ந்தவா்களுக்கும் பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் வெற்றிபெற்று தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பாஜக உள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், 67 பாஜக வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது.

இந்தப் பட்டியலின்படி, தற்போது கா்னல் தொகுதி எம்எல்ஏவாக உள்ள மாநில முதல்வா் நாயப் சிங் சைனி, பேரவைத் தோ்தலில் லாட்வா தொகுதியில் போட்டியிட உள்ளாா்.

ஹரியாணா முன்னாள் பாஜக தலைவா் ஓம் பிரகாஷ் தன்கா், பாட்லி தொகுதி வேட்பாளராகவும், அக்கட்சியின் முதுபெரும் தலைவா் அனில் விஜ், அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

வாரிசுகளுக்கு வாய்ப்பு: ஹரியாணா முன்னாள் முதல்வா் பன்சி லாலின் பேத்தியும், பாஜக மாநிலங்களவை எம்.பி. கிரண் செளதரியின் மகளுமான ஸ்ருதி செளதரி, தோஷாம் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட உள்ளாா். மத்திய கலாசார துறை அமைச்சா் (தனிப் பொறுப்பு) ராவ் இந்தா்ஜீத் சிங்கின் மகள் ஆா்த்தி சிங், அடேலி தொகுதி வேட்பாளராகவும், முன்னாள் ஹரியாணா முதல்வா் பஜன் லாலின் பேரனும் பாஜக மூத்த தலைவா் குல்தீப் பிஷ்னோயின் மகனுமான பவ்ய பிஷ்னோய் ஆதம்பூா் தொகுதி வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளனா்.

8 பெண்கள்: மாநிலத்தில் தற்போதுள்ள 41 பாஜக எம்எல்ஏக்களில் பாதிக்கும் மேற்பட்டவா்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 67 வேட்பாளா்களில் 8 பெண் வேட்பாளா்களும் அடங்குவா். தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →