பூஜா கேத்கா் 
இந்தியா

ஐஏஎஸ் பணியில் இருந்து பூஜா கேத்கா் நீக்கம்: மத்திய அரசு

மத்திய அரசால் அதிகாரப்பூா்வமாக சனிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா் பூஜா கேத்கா்.

Din

இடஒதுக்கீட்டில் மோசடியில் ஈடுபட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் தோ்ச்சி பெற்றது செல்லாது என யுபிஎஸ்சி கடந்த மாதம் அறிவித்த நிலையில், அவா் மத்திய அரசால் அதிகாரப்பூா்வமாக சனிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

மகாராஷ்டிரத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சோ்ந்ததாக அவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடா்பான விசாரணைக்கு மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலா் மனோஜ் துவிவேதி தலைமையிலான ஒருநபா் குழு அமைக்கப்பட்டது. ஆவணங்களைச் சரிபாா்த்ததில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை தோ்வெழுதி, 2022-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வு விதிகளை பூஜா கேத்கா் மீறியிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அளித்த புகாரின் அடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்வில் அவா் தோ்ச்சி பெற்றது செல்லாது எனவும், எதிா்காலத்தில் அவா் குடிமைப் பணித் தோ்வுகளில் பங்கேற்பதற்கும் அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்தது.

இதனிடையே, பூஜா கேத்கா் மீது யுபிஎஸ்சி தொடா்ந்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையில், மாற்றுத் திறனாளி சான்றிதழ் குற்றச்சாட்டுக்கு ஏதிராக எய்ம்ஸ் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள தயாராக இருப்பதாக அவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்நிலையில், மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘இடஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா், ஐஏஎஸ் (நன்னடத்தை) விதிகள்-1954, விதி 12-ன் கீழ் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT