குளத்தில் சடலங்களாகக் கிடந்த காணாமல் போன சிறுமிகள்!
உடலில் காயங்கள் ஏதும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தகவல்
காணாமல் போன சிறுமிகளை தேடப்பட்டு வந்த நிலையில், குளத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா கிராமத்தில் 12, 16 வயதுடைய சிறுமிகள் இருவர் வைக்கோல் சேகரிக்க, சனிக்கிழமை பிற்பகலில் சென்றுள்ளனர். ஆனால், நள்ளிரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர், அப்பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர்.
இருப்பினும், சிறுமிகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் சிறுமிகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிறுமி ஒருவரின் தாயார், ஞாயிற்றுக்கிழமை காலையில் குளத்திற்கு சென்றபோது, காணாமல் போன சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் குளத்தில் மிதப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமிகளின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், சிறுமிகளின் உடல்களில் எந்தவித காயமும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.