கோப்புப் படம் 
இந்தியா

சென்னையில் அக். 8ல் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி!

இந்திய விமானப்படையின் 92 ஆவது நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது.

DIN

இந்திய விமானப்படையின் நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது.

1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய விமானப்படையின் நிறுவன தினக் கொண்டாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, 92 ஆவது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றன.

கொண்டாட்டத்தின்போது, இந்திய விமானப்படை அணிவகுப்பு, சென்னையில் காலை 7.45 மணியளவில் தொடங்கும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் ஒரு பிரமாண்டமான விமானக் கண்காட்சி நடைபெறும்.

இதில் ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்தும்; மேலும், சென்னையில் இந்த வரலாற்று நிகழ்வு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகள், ஒரு புதிய விமானப்படை தளபதியின் தலைமையின்கீழ் நடைபெறும்; அவர் இந்த மாத இறுதியில் பதவியேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

SCROLL FOR NEXT