வினேஷ் போகத், பஜ்ரங் புனியா 
இந்தியா

வினேஷ் போகத், புனியாவின் ராஜிநாமா ஏற்பு: வடக்கு ரயில்வே

வினேஷ் போகத், புனியாவின் ராஜிநாமாவை ஏற்றதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...

DIN

வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டதாக வடக்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் தாங்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வந்த பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர்.

இந்த நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டில் சிறப்புப் பணி அதிகாரிகளாக பணியாற்றி வந்த வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரின் ராஜிநாமாவை உடனடியாக ஏற்பதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
வடக்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

காங்கிரஸில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா

கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நேரில் சந்தித்த பிறகு, வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும் தங்களது அரசுப் பணியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி,வேணுகோபால் முன்னிலையில் இருவரும் கட்சியில் இணைந்தனர்.

காங்கிரஸில் இணைந்த சில மணி நேரத்திலேயே ஹரியாணா தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை போகத்துக்கு அக் கட்சி அளித்தது.

அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறும் ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியின் வேட்பாளராக போகாட் அறிவிக்கப்பட்டாா்.

பஜ்ரங் புனியாவுக்கு இந்திய விவசாய காங்கிரஸின் செயல் தலைவா் பதவி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT