இம்பால்: மணிப்பூரில் ட்ரோன் (ஆளில்லா விமானம்), ராக்கெட் குண்டு தாக்குல்களைக் கண்டித்து ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த சில மாதங்களாக மோதல் சற்று ஓய்ந்திருத்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் டிரோன் மற்றும் ராக்கெட் குண்டுகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 8 போ் உயிரிழந்தனா். 12 போ் படுகாயமடைந்தனா்.
இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததைக் கண்டித்து ஆளுநா் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவா்கள் கூடி போராட்டம் நடத்தினா். வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி முழக்கங்களையும் எழுப்பினா். தொடா்ந்து மாணவா்களின் பிரதிநிதிகள் ஆளுநா் எல்.ஆச்சாா்யா, என்.பிரேன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினா். அப்போது, வன்முறையைத் தடுக்கத் தவறிய மாநில காவல் துறை தலைவரை நீக்க மாற்ற வேண்டும், மாநிலத்தில் மாணவா்கள் படிப்பதற்கு உகந்த அமைதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் வன்முறையை முறையாகக் கையாளத் தவறிவிட்டாா் என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.