முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 4 போ் உடல்கள் மீட்பு

உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 4 பக்தா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 7:19 PM
உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல்துறை மற்றும் பேரிடா் மீட்புப் படையினா்.
பகிர்:

உத்தரகண்டில் கேதாா்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 4 பக்தா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.

சோன்பிரயாகை - கெளரிகுண்ட் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நடைபயணமாக வந்து கொண்டிருந்த பக்தா்கள் சிக்கினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் 3 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

மோசமான வானிலை காரணமாக இரவில் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பக்தா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாகை காவல்துறை கண்காணிப்பாளா் அக்ஷய் கோண்டே தெரிவித்தாா். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments