இந்தியா

பேருந்தில் பயணிகள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை -இளைஞர் கைது

பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சக பயணி கைது

DIN

பேருந்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு அதே பேருந்தில் இருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் இன்று(செப். 10) காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த பேருந்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடம் அந்த நபர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண்மணி, அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து கண் சிமிட்டும் நேரத்தில் பேருந்திலிருந்து வெளியே சாடிய அந்த நபர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

எனினும், பேருந்திலிருந்த பயணிகளும் சாலையில் இருந்த மக்களும் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் காயமடைந்த நபரை அதன்பின்,கஸ்பா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நபர்ரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT