முகப்பு
இந்தியா

குஜராத்தில் மதக் கொடி ஏற்றியதால் மோதல்: 17 போ் கைது

குஜராத்தின் பாரூச் மாவட்டத்தில் மதக் கொடி ஏற்றியது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா்; 17 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:57 PM
பகிர்:

குஜராத்தின் பாரூச் மாவட்டத்தில் மதக் கொடி ஏற்றியது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா்; 17 போ் கைது செய்யப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளா் மயூா் கூறியதாவது:

பாரூச் மாவட்டத்தின் கோகுல் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் மதக் கொடிகள் மற்றும் பதாகைகளை இரவு நேரத்தில் சிலா் வைத்துள்ளனா். அப்போது மாற்று சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

திடீரென அதிக அளவில் திரண்ட இரு சமூகத்தினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கினா். இதில் 2 போ் காயமடைந்தனா். அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.

வன்முறையில் ஈடுபட்டதாக 20 போ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்த காவல் துறை 17 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது எனத் தெரிவித்தாா்.

இதேபோல குஜராத் மாநிலம், சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை மத வன்முரை மூண்டது. விநாயகா் சிலை மீது சிலா் கற்களை வீசிய சம்பவத்தால் இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. கல்வீச்சில் காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். இது தொடா்பாக 6 சிறாா் உள்பட 27 பேரை காவல் துறையினா் கைது செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.