ஐஐடி குவஹாட்டியில் பி.டெக். மாணவர் மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் கந்துரு வி. கிருஷ்ணா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
குவஹாட்டி ஐஐடியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் பி.டெக். கணினி அறிவியல் படித்துவந்தார். இவர் கடந்த திங்கள்கிழமை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் கூறுகையில், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், வருகைப்பதிவு குறைவாக இருந்ததால் சுமார் 200 மாணவர்கள் வரை தேர்வில் தோல்வியடைந்துள்ளதாக அறிவித்தனர். இதை ஏற்க முடியாது. ஓரிரு மாணவர்கள் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதற்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்க முடியாது.
கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு ஐஐடி-குவஹாட்டி நச்சு சூழலையும் ஒருவித அழுத்தத்தையும் உருவாக்கி வருகின்றது. இந்தாண்டில் இது மூன்றாவது மரணமாகும். ஆகஸ்ட் 9ல் உ.பி.யைச் சேர்ந்த எம்.டெக். மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில், மாணவியின் மரணம் குறித்து ஐஐடி-குவஹாட்டி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், மன அழுத்தத்தைச் சமாளிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் தொடர் மனநலத் திட்டங்களும் தொடங்கப்பட்டன.
அதற்கு முன்னதாக 20 வயதான பிகாரைச் சேர்ந்த பி.டெக் மாணவரும் ஏப்ரல் மாதம் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணாவின் ராஜிநானாமாவை ஐஐடி-குவஹாத்தி அதிகாரிகள் ற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.