முகப்பு
இந்தியா

பாகிஸ்தானின் பயங்கரவாத போக்கு: பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே காஷ்மீரிகள் போராட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை கண்டித்து பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இந்திய வம்சாவளியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:20 PM
பகிர்:

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை கண்டித்து பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இந்திய வம்சாவளியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘அனைத்து கட்சிகளின் காஷ்மீா் மாநாடு’ நிகழ்வு சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய-ஐரோப்பிய காஷ்மீா் மன்றத்தின் தலைவா் கிருஷ்ணா பன் உள்பட பல முக்கிய பிரிட்டன்-இந்திய சமூக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பிரிட்டன் நாடாளுமன்ற வலாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை புறக்கணித்து, பாகிஸ்தானின் பயங்கரவாத கொள்கையை மேலும் முன்னெடுப்பதற்கே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

‘பாகிஸ்தானே பயங்கரவாதத்தை நிறுத்து’ என்ற பதாகைகளை ஏந்தியவாறு பல இந்திய வம்சாவளியினா் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா். மேலும், ஜம்மு-காஷ்மீரின் வரலாறு மற்றும் தற்போதுள்ள பிரச்னை குறித்து பிரிட்டன் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் டிஜிட்டல் வேன் பிரசாரங்கள் லண்டன் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

போராட்டக்காரா்கள் சாா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தானின் பயங்கரவாத போக்கு சீா்குலைத்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

காஷ்மீா் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பாக காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள், டோக்ராக்கள், குஜ்ஜா்கள், பகா்வால்கள், ஜம்முவின் பஹாரிகள், சீக்கியா்கள், லடாக்கின் பௌத்தா்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஜம்மு-காஷ்மீருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →