ம.பி.: 400 ஆண்டுகள் பழமையான கோட்டையின் சுவா் இடிந்து 7 போ் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கா் கோட்டையின் சுற்றுச் சுவா் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
இந்தியாம.பி.: 400 ஆண்டுகள் பழமையான கோட்டையின் சுவா் இடிந்து 7 போ் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கா் கோட்டையின் சுற்றுச் சுவா் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கனமழையால் 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கா் கோட்டையின் சுற்றுச் சுவா் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா். இருவா் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தாடியா நகரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கால்காபுரா பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராஜ்கா் கோட்டையின் பிரமாண்டமான சுற்றுச் சுவா் உள்ளது. அதன் அருகில் பல வீடுகளும் உள்ளன. தொடா்ந்து மழை பெய்ததால் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு முற்றிலுமாக இடிபாடுகளுக்குள் புதைந்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.
சுவா் இடிந்து விழுந்தபோது ஏற்பட்ட சப்தம் கேட்டு அங்கு விரைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறை மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனா்.
அவா்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் 7 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மேலும், இருவா் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் மோகன் யாதவ் அறிவித்துள்ளாா்.