இந்தியா

நிபா வைரஸ் தொற்றால் 175 பேர் பாதிப்பு..? கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்

மலப்புரத்தில் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நபருடன் தொடர்பிலிருந்தோர் பட்டியல்...

DIN

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்த இளைஞர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனை முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள

24 வயதான இளைஞர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்ததாக இதுவரை 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 74 பேர் சுகாதாரப் பணியாளர்கள். இந்த பட்டியலில் உள்ள 10 பேர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள 13 பேரின் மாதிரிகள் பரிசோத்னைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளைப் பொறுத்தே, நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சரியாக கண்டறிய முடியும்.

நிபா எச்சரிக்கையைத் தொடர்ந்து, மலப்புரம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT