உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி.  
இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல விழாவில் பங்கேற்றது ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றது ஏன்? என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

DIN

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றது ஏன்? என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் கடந்த செப். 10 அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வதா? என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

'விநாயகர் சதுர்த்தி வெறும் நம்பிக்கைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல. இது சுதந்திர இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது.

அந்தக் காலத்திலும் பிரித்தாளும் கொள்கையில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் விநாயகர் பூஜையை வெறுத்தார்கள். இன்றும் இந்த சமூகத்தைப் பிரித்து உடைப்பதில் மும்முரமாக இருக்கும் அதிகார வெறி கொண்டவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நான் விநாயகர் பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோபத்தில் உள்ளனர். நான் பூஜையில் பங்கேற்றது பொறுக்காமல் விமர்சிக்கின்றனர்' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT