முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்!

இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார்.

Updated On : 17 செப்டம்பர், 2024 at 3:03 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். செப். 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முக்கியமாக, அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ஆம் தேதி நடைபெற உள்ள குவாட் கூட்டமைப்பின் 4-ஆவது மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்கிறார்.

செப்.22-ஆம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார். செப். 23-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.