ராகுல் காந்தி PTI
இந்தியா

'ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்'- ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!

ஜம்மு- காஷ்மீர் மக்கள் அனைவரும் வாக்களிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்.

DIN

ஜம்மு- காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகளே, இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு அங்கு நடைபெறுகிறது.

வரலாற்றில் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்கள் அனைவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயல். ஜம்மு-காஷ்மீரை அவமதிக்கும் செயல்.

இந்தியாவுக்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கும், வேலைவாய்ப்புகளை கொண்டுவரும், பெண்களை வலிமையாக்கும், அநீதியான உலகத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டுவரும், ஜம்மு- காஷ்மீரை செழிப்பாக மாற்றும்.

எனவே, நீங்கள் அனைவரும் வெளியே வந்து உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

முதல் கட்டத் தேர்தல்

ஜம்மு - காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT