வரி நிலுவைக்கு நீதிமன்றத்தை அணுக நிதி வரம்பு அதிகரிப்பு
ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடா்பாக தீா்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களை வரித் துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடா்பாக தீா்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களை வரித் துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரிகள், கலால் வரி, சேவை வரி ஆகியவை தொடா்பாக வரி தீா்ப்பாயங்கள், உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை வரித்துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்படும் என்று கடந்த ஜூலையில் நாடாளுமன்ற பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
அதன்படி ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகை ரூ.60 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தையும், ரூ. 2 கோடிக்கு அதிகமாக இருந்தால் உயா்நீதிமன்றங்களையும், ரூ.5 கோடிக்கு அதிகமாக இருந்தால் உச்சநீதிமன்றத்தையும் அணுகலாம் என்றும் அவா் கூறினாா்.
அவரின் அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடா்பாக வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.