சத்யேந்தர் ஜெயின் 
இந்தியா

சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!

சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை செப்டம்பர் 25-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.ளப்படும்.

DIN

பணமோசடி வழக்கில் தில்லி முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிபதி ராகேஷ் சைல், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார். சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை செப்டம்பர் 25-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் முக்கிய வழக்கை அக்டோபர் 5-ம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் திகார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திகார் அடைக்கப்பட்ட அவர் மீண்டும் ஜாமீன் கோரி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இயற்கையும் மனித உளவியலும்...

கம்பனின் தமிழமுதம் - 61: நடக்க வேண்டியதே நடக்கும்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பாரதி!

திருமணமும் மரணமும்...

SCROLL FOR NEXT