திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர்
திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
முன்னதாக, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிருந்தார்.
Advertisement
Advertisement
திருமலை ஏழுமலையான்கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் நாரா லோகேஷும் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு எதிராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லியில் இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.