இந்து மதச் சடங்குகள் பற்றி அறியாதவர் ஜெகன்மோகன்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!
ஆட்சி மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகளைப் பற்றிய அறிவு ரெட்டிக்கு கிடையாது.
இந்து மதச் சடங்குகள், மரபுகள், பழக்கவழக்கங்கள் பற்றி அறியாதவர் ஜெகன்மோகன் ரெட்டி என்று பாஜக தலைவர் எல். தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை 23-ம் தேதி லட்டு சுவையில் மாற்றம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள்கூட கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திரத்தில் புதிய சர்ச்சை நிலவிவரும் நிலையில், பாஜக தலைவர் தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
Advertisement
Advertisement
பொது கஜானாவைக் கொள்ளையடிப்பது, இந்து மதச் சடங்குகள், மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்குக் களங்கம் விளைவிப்பதைத் தவிர, ஆட்சி மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகளைப் பற்றிய அறிவு ரெட்டிக்கு கிடையாது.
லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிப்பதற்குப் பதிலாக, முன்னாள் முதல்வர் பாஜக தலைவர்களை அரைகுறை அறிவு உள்ளவர்கள் என்று கூறிவருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.