கங்கனா ரணாவத் கோப்புப் படம்
இந்தியா

பேரழிவு நிதியெல்லாம் சோனியா காந்திக்குதான் செல்கிறது: கங்கனா

பாஜக உறுப்பினர் இயக்க நிகழ்ச்சியில் பாஜக எம்பி கங்கனா ரணாவத் பேச்சு

DIN

ஹிமாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசினார், பாஜக எம்பி கங்கனா ரணாவத்.

ஹிமாசலில் பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மண்டி தொகுதியின் எம்பியான கங்கனா ரணாவத், ஆளும் காங்கிரஸ் கட்சியின்மீது சில விமர்சனங்களை முன்வைத்தார்.

நிகழ்ச்சியின்போது கங்கனா பேசியதாவது, ``காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நிலவுகிறது என்பதையும், அந்த மாநிலங்களை காங்கிரஸ் வெற்றிடமாக்கியுள்ளன என்பதையும் அனைவரும் அறிவார்கள். தேர்தலுக்காக ஒரு கட்சி எப்படி இவ்வளவு செலவிடுகிறது என்று ஆச்சரியமாக உள்ளது.

அவர்கள் ஆளும் மாநிலங்களில் கடன் வாங்கி, அதனை சோனியா காந்திக்குதான் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக அந்த மாநிலங்களெல்லாம் வெறிச்சோடி விட்டன.

பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்

பேரழிவுகளும் காங்கிரஸ் அரசும்தான், மாநிலத்தை பல தசாப்தங்களுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டன. ஆகையால் தற்போதைய அரசை, மக்கள் அனைவரும் சேர்ந்து வேரோடு பிடுங்க வேண்டும்.

பேரழிவுக்காக நாங்கள் நிதி வழங்கினால், அது முதல்வர் நிவாரண நிதிக்குச் செல்ல வேண்டும், ஆனால், அது சோனியா நிவாரண நிதிக்குதான் செல்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

பாஜக உறுப்பினர் இயக்க தொடக்க நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்

அதுமட்டுமின்றி, சாலைகளில் உள்ள குழிகளால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். எனது பகுதிக்கு என்னால் முடிந்ததைவிட அதிகமாகவே செய்வேன். ஆனால், பொதுப்பணித்துறை அமைச்சரும் ஏதாவது செய்ய வேண்டும்.

சம்பளம், ஓய்வூதியங்கள் தாமதமாகின்றன; நுகர்வோருக்கு இலவச மின்சாரமும் தண்ணீர் வசதிகளும்கூட பறிக்கப்பட்டுள்ளன. ஹிமாசலின் இந்த மோசமான நிலைமை நாட்டின் பிற பகுதிகளுக்கும் தெரியும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT