இந்தியா

இந்தியாவை உலகுக்கு காட்ட வேண்டிய நேரமிது: செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு ராகுல் வாழ்த்து!

ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா உள்ளது.

DIN

45-ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட இந்திய அணியின் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் ``ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் செஸ் ஒலிம்பியாட்டின் இறுதி சுற்றுகளுக்குள் அடியெடுத்து வைக்கும் இந்திய அணிக்கு, வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வரலாற்றை உருவாக்கும் விளிம்பில், இன்று நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அயராத அர்ப்பணிப்பும், அசாத்தியமான திறன்களும்தான், உங்களை இந்த தருணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளன. தங்கத்தைக் கைப்பற்றி, இந்தியா எதனால் ஆனது என்பதை உலகுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, செப். 11 ஆம் தேதியில் தொடங்கியது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது.

ஓபன் பிரிவு அணியில் அா்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் உள்ளனா். மகளிர் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இருக்கின்றனா்.

ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக தங்கம் வெல்வதற்கான நெருக்கத்தில் இந்தியா உள்ளது. 10வது சுற்றின் முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தவறாக சித்திரிக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களால் மனமுடைந்த பிரியங்கா மோகன்!

ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பு! | TVK | Vijay

தமிழக விவசாயிகள் இந்தியளவில் முன்மாதிரி: அமைச்சர் எம்.ஆர்.கே.பி

SCROLL FOR NEXT