FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதம் அனுசரிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதம் அனுசரிப்பு

Updated On : 24 செப்டம்பர் 2024, 10:24 am IST
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதற்கு பரிகாரமாக தான் விரதமிருந்து சுவாமியை வழிபடப் போவதாக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று(செப்.24) காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் பக்தர்களுடன் ஈடுபட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments