பானி பூரி கடையில் ஆய்வு மேற்கொள்ளும் உணவுப் பாதுகாப்புத் துறையினா். கோப்புப்படம்
இந்தியா

உணவகங்களில் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்!

உணவக உரிமையாளர்கள் பெயர்களுடன் அடையாள அட்டைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

DIN

உத்தர பிரதேசத்தில் அனைத்து உணவகங்களிலும் கடை உரிமையாளர் உள்பட அதன் பொறுப்பாளர்கள், மேலாளர்கள் ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமையன்று அறிவுறுத்தியுள்ள நிலையில், ஹிமாசலிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள அதே நடைமுறையை இனி அதன் அண்டை மாநிலமான ஹிமாசல பிரதேசத்திலும் அமல்படுத்த ஆளும் காங்கிரஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி , உணவகங்களில் அவற்றின் உரிமையாளர்கள் பெயர்களுடன் அடையாள அட்டைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவகங்களுக்கும் இது பொருந்தும்.

பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி கார்ப்பரேஷன் துறைகளுடன் நேற்று நடத்தப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான விக்ரமாதித்ய சிங் இன்று (செப்.25) தெரிவித்துள்ளார்.

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்கப்படுவதை உறுதிசெய்யவே அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் செய்தியாளர்களுடன் இன்று பேசுகையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT