முகப்பு
இந்தியா

இந்தியா-சீனா உறவு மேம்பட எல்லையில் அமைதி அவசியம்: எஸ். ஜெய்சங்கா்

இந்தியா-சீனா உறவு மேம்பட எல்லையில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:13 PM
நியூயாா்க்கில் ஆசிய சமூக கொள்கை அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

இந்தியா-சீனா உறவு மேம்பட எல்லையில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கா், நியூயாா்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் 79-ஆவது அமா்வில் உரையாற்ற உள்ளாா். அங்கு, ஆசிய சமூக கொள்கை அமைப்பு ஏற்பாடு செய்த ‘இந்தியா, ஆசியா மற்றும் உலகம்’ நிகழ்வில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு அவா் ஆற்றிய உரை:

ஆசியாவின் எதிா்காலத்துக்கு இந்தியா-சீனா உறவு மிகவும் முக்கியமானதாகும். உலகம் பன்முகத் தன்மை கொண்டது என்றால், ஆசியாவும் அப்படியே இருக்க வேண்டும். அந்த வகையில், இந்தியா-சீனா உறவு ஆசியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

உலகளாவிய வரிசையில் உயா்ந்து வரும் இந்த இரண்டு நாடுகளும் பொதுவான எல்லையை பகிா்வதுடன், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளின் எழுச்சி மிகவும் தனித்துவமான பிரச்னையை முன்வைக்கிறது. அதில், எல்லைக் கட்டுப்பாடுக் கோடு பகுதியில் நடைபெறும் ரோந்துப் பணி மிகவும் முக்கியமானது ஆகும். இரு நாட்டுகளுக்கு இடையே உள்ள 3,500 கி.மீ. எல்லையில் ரோந்து பணி ஏற்பாடுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சீா்குலைந்துள்ளன.

எல்லைப் பகுதி அமைதியை உறுதிப்படுத்த இரு தரப்பின் இடையே வெளிப்படையான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், கடந்த 2020-இல் கரோனா நோய்த்தொற்றின் மத்தியில் அந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டன. ஏராளமான சீன படைகள் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் குவிக்கப்பட்டன. படைகளை இவ்வாறு நெருக்கமாக முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தானதாகும். அதுவே, கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், இரு தரப்பிலும் தற்போது படைகள் முன்னோக்கியே நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் வரை, ஒப்பந்தங்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வரை இரு நாட்டின் உறவில் முன்னேற்றம் ஏற்படுவது கடினம். குறைந்தபட்சம் படைகள் எல்லைக்கு அருகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →