முகப்பு
இந்தியா

மருத்துவக் கல்லூரிகளுக்கு வங்கி உத்தரவாதம் மாற்றியமைப்பு

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான வங்கி உத்தரவாதத் தொகையை மாற்றியமைத்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:25 PM
பகிர்:

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான வங்கி உத்தரவாதத் தொகையை மாற்றியமைத்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 50 எம்பிபிஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு ரூ. 15 கோடி உத்தரவாத தொகையும், 100 இடங்கள் எனில் கூடுதலாக ரூ. 5 கோடியும் செலுத்த வேண்டும். அதேபோல், 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ரூ. 25 கோடி வங்கி உத்தரவாதத் தொகை செலுத்த வேண்டும் என என்எம்சி அறிவித்துள்ளது.

முதுநிலை இடங்களைப் பொருத்தவரை முதல் 4 இடங்களுக்கு ரூ. 2 கோடியும், அதற்கு அடுத்த ஒவ்வொரு இடங்களுக்கும் தலா ரூ. 25 லட்சமும் உத்தரவாத தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளைத் தொடங்கவும், அந்த இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பிக்கின்றன. அப்போது சம்பந்தப்பட்ட கல்லூரிகளானது வங்கி உத்தரவாத சான்றுகளையும் சமா்ப்பிக்க வேண்டும் என்பது விதி. நிதிசாா்ந்த இடா்களை கல்லூரிகள் எதிா்கொண்டால், அதற்கான பொறுப்பை வங்கிகள் ஏற்றுக் கொள்வதற்கான உத்தரவாதமாக அது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.