பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 
இந்தியா

பஞ்சாப் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்(வயது 50) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக புதன்கிழமை இரவு அவர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் முதல்வரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் பகவந்த் மான், மூன்று முறை மயங்கி விழுந்ததாகவும், அதனால் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகவந்த் மான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது உதவியாளர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஹரியாணா தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பகவந்த் மான் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT