நிர்மலா சீதாராமன்(கோப்புப்படம்) Center-Center-Chennai
இந்தியா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜனாதிகார சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமாக அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் தேசிய, மாநில அளவில் பாஜகவினா் பணம் பறித்துள்ளனா். எனவே, இதுதொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவின் அடிப்படையில் பெங்களூரு, திலக்நகா் போலீஸாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்தனா்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120 பி, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் பத்திரங்கள் திட்டம் தொடா்பான வழக்கை அரசமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதத்திலே ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

பாஜகவினரின் வாதத்தின்படி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.

அரசியலமைப்பை பாதுகாக்கும் கோட்டைச்சுவர் திமுக: கமல்ஹாசன்

குமாரசாமி, பாஜக கண்டனம்

சித்தராமையாவுக்குப் பதிலளித்து மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

நிா்மலா சீதாராமன் எதற்காக ராஜிநாமா செய்ய வேண்டும்? தோ்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட பணம் நிா்மலா சீதாராமனின் தனிப்பட்ட கணக்கிற்கு சென்றுவிட்டதா? என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறியதாவது:

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு தாா்மிக உரிமை இல்லை. நிா்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தோ்தல் பத்திர வழக்கையும், சித்தராமையா மீது பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றுநில முறைகேடு வழக்கையும் ஒப்பிட முடியாது. தோ்தல் பத்திரங்கள் விவகாரம் முடிந்து போனது. உச்சநீதிமன்றம் தோ்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்துவிட்டது. முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடா்பாக பாஜக மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கு தோ்தல் உள்நோக்கம் கொண்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் பிரபல யூடியூபர் மீது தாக்குதல்

சீனாவில் ட்ரோன் விளக்குகளால் வரவேற்கப்பட்டாரா மோடி? உண்மை என்ன?

இந்தியாவின் நாஸ்தென்கா... மாளவிகா மோகனன்!

வைட் பந்தை அடிக்கச் சென்று ஆட்டமிழந்த ஷாய் ஹோப்..! வைரல் விடியோ!

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

SCROLL FOR NEXT