விமானப் படை புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் நாளை (செப். 30) பதவியேற்கவுள்ளார்.
தற்போது, விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி செப். 30-ம் தேதியுடன் (நாளையுடன்) ஓய்வு பெற உள்ளார்.
இதனையடுத்து அந்தப் பதவிக்கு ஏ.பி. சிங் என்றழைக்கப்படும் அமர் பிரீத் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்தாண்டு பிப்ரவரி முதல் விமானப் படையின் துணைத்தளபதியாக இருக்கும் ஏ.பி. சிங், நாளை விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
படிக்க | சொல்லப் போனால்... செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!
யார் இந்த ஏ.பி. சிங்?
1984-ல் விமானப்படையில் இணைந்த ஏ.பி. சிங், தேசிய பாதுகாப்பு அகாதெமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மிக் - 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2019 ஆம் ஆண்டு அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.