ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் களமிறங்கியுள்ளன.
முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி நடந்த தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமாா் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று(செப். 29) மாலையுடன் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரமும் நிறைவடைந்தது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், முதல் முறையாக இங்கு தேர்தல் நடைபெறுவதால் ஜம்மு காஷ்மீர் மக்கள் யார் பக்கம்? என்ற எதிர்பார்ப்பு நாடெங்கிலும் காணப்படுகிறது. இந்நிலையில், மூன்று கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.