அகமதுநகரில் பயங்கர விபத்து: 6 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துப் பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துப் பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து அகமதுநகர்-கல்யாண் சாலையில் தவாலிபுரி பாடா அருகே அதிகாலை 2.30 மணிக்கு நடந்தது.
கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கவிழ்ந்ததால், அதிலிருந்து கரும்புகளை இறக்குவதற்கு மற்றொரு டிராக்டர் கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு வந்த கார் ஓட்டுநரும், வண்டியை நிறுத்தி, கரும்பு இறக்கும் பணியில் ஈடுபட்டார்.
Advertisement
அப்போது அங்கு வந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து லாரி மற்றும் காரின் மீது மோதியது. தொழிலாளர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.